Search This Blog

Saturday, December 29, 2012

தாமினி கற்றுத் தந்த பாடம்

குறை சொல்ல வேண்டிய அனைவரையும் கை காட்டியாச்சு. அடுத்தது என்ன? நம்ம சோலிய பாக்க போயிறனுமா? நம்ம பக்கம் எதை திருத்தணும்னு யோசிக்கலாமே? 
இதுவும் குறைகூறும் படலம்தான். ஆனா நம்மளோட குறைகள். 
முதல்ல ரேப் பண்றவங்களோட மனநிலை: 
  1. பாலியல் இச்சை முக்கிய காரணம்னாலும் அதுமட்டுமே அவங்க உந்துதல் இல்ல. 
  2. நளினி ஜமீலாவின் 'ஒரு பாலியல் தொழிலாளியின் கதை'ல செக்ஸ் வொர்க்கரக் கூட குரூரமா பலாத்காரம் பண்ணி கொல்றதா சொல்றாங்க. ஆக இது ஒருவித மனநோயும்தான்.
  3. ஒரு பெண்ண பலாத்காரம் பண்ணா, அவளை கெட்டுப்போன 'பொருளா' பாக்குது சமுதாயம். இது கூடுதல் தைரியத்தை தருது ரேப்பிஸ்டுகளுக்கு பலாத்காரம் பண்ணாக்கூடா பொண்ணுங்க புகார் செய்யமாட்டாங்கன்னு.

    
நம் சமுதாயத்தின் பார்வையில் 'கற்பு'னு ஒரு கெட்ட வார்த்தையால சிதைஞ்சு போயிருக்கோம். 

ரேப் பண்ணா வலி, வேதனை மொத்தமும் அனுபவிக்குறது பெண்கள். அவங்களதான் அவமானப்படுத்தவும் செய்றாங்க. இது ஆண்வர்க்கத்தோட முரணான குயுக்தி. அவங்க தப்ப திசைதிருப்பறாங்க. ஆனா இது புரியாம பலாத்காரப்படுத்தப்பட்ட பெண்ண உனக்கு கற்பில்லையேனு புலம்பறதும் இன்னொரு பெண்ணாதான் இருக்கும். 

 ஒரு டிஆர் பட வசனம்- "பசங்க நனஞ்சத் துணி மாதிரி, நனஞ்சதும் தெரியாது, காய்ஞ்சதும் தெரியாது. ஆனா பொண்ணுங்க கிழிஞ்ச துணி மாதிரி, கிழிஞ்சதும் தெரியும், தெச்சதும் தெரியும்."(இத பார்க்க நேரிடும் போதெல்லாம் துப்புவேன்கிறது வேறு விஷயம்)

இதுதான் மக்களோட மனநிலையும். இப்படியே அவங்க ஆண்கள வளத்து, தான் செய்யறது எதுவுமே தப்பில்லனு வறட்டு தைரியம் வந்துடுது.
சமீபத்துல ஒரு இணையப் பதிவு படிச்சேன். பாடகி ஆபாச பாடல்கள் பாடி சமூக சீர்கேடுக்கு காரணமாகிறார் அதனால் அவங்ககிட்ட ஆபாசமா பேசினவங்கள குறை சொல்ல என்ன தகுதி இருக்குன்னு போகுது அந்த பதிவு. பாடகியோட குற்றச்சாட்டு எவ்ளோ ஆதாரமற்றதுன்னு ஒருபக்கம் இருந்தாலும், இந்தக் கருத்துக்கு பெண்களே ஆதரவு தெரிவிச்சது ஆச்சரியம் தருது.அப்போ, ஆபாச பாடல் பாடினா அந்த பெண்ண என்ன வேணா பேசலாம், என்ன வேணா செய்யலாம்னு யார் சுதந்திரம் கொடுத்தது?

இப்போ அந்த எழுத்தாளரே சொல்றார் மற்ற ஆண்கள் எல்லாருமே இன்னும் வாய்ப்பு கிடைக்காத ரேப்பிஸ்ட்னு. இதை ஆண்கள்தான் விளக்கனும்.

இப்போ பெண்கள பாதுகாப்பு கருதி அரைகுறை ஆடை வேணாம். நைட்ல சுத்தாதீங்கனு சொல்றாங்க. மேம்போக்கா பார்த்தா அக்கறையா தெரியும். ஆனா இது ஒருவகை கையாலாகாத்தனம். சிஎஸ்கேவின் கீச்சுதான் தோன்றுகிறது, கொன்றது அவர் தப்புதான் எனினும் செத்துப் போனதும் தப்புதான்னு தண்டிக்கவேண்டியவங்கள விட்டுட்டு பொண்ண குறை சொல்றாங்க.

முதல்ல பாதிக்கப்பட்ட பெண்கள் மனவலிமையோட இருக்கணும். இது களங்கம் இல்ல உரிமைமீறல்னு புரிஞ்சுக்கனும். பெண்கள் இதை புகார் பண்ற அளவுக்கு முன்னேறினாலே போதும், ரேப்பிஸ்டுகள் ஆட்டம் குறைஞ்சுடும். 


   
கற்பைவிட மிக உன்னதமானது நம்ம உயிர். அதை பாதுகாக்கிறதுதான் நம்ம நோக்கமா இருக்கனும். இவையெல்லாம் விட முக்கியம் நம்ம பிள்ளைகளுக்கு பால் பாகுபாடின்றி பழகக் கத்துத் தரணும்.எதிர்காலத்துல தாமினி மாதிரி யாரும் அவஸ்தை படக் கூடாது.