Search This Blog

Sunday, February 3, 2013

'டேவிட்' பற்றி ஒரு பதிவு

மணிரத்னத்தின் சிஷ்யர் பிஜோய் நம்பியார் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று பார்த்தேன், பொய்க்கவில்லை. மிக மாறுபட்ட genreவில் Goa கலாசாரத்தை முதன்முறையாக தமிழுக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். ுழு நேர குடிகாரராக விக்ரம், 'மரிய பிதாஷே' பாடலில் கலக்கலாக அறிமுகமாகிறார். விக்ரம் வரும் பகுதி முழுவதும் டப்பிங் என்றாலும் நான் மிகவும் இரசித்து பார்த்த பகுதி அதுதான்.


இருவேறு டேவிட்களின், இருவேறு காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை தொய்வில்லாத திரைக்கதையில் நிதானமாக பயணிக்கிறது கதை.
பிளாக் ஹ்யூமருக்கு, தமிழில் 'டேவிட்' சிறந்த படமாக அமையும். அனிருத்தின் இசை பின்னணியிலும், பாடல்களிலும் 'செம'.
 

 


அக்காவும், தம்பியுமாக(ஜீவா) ஒன்றாக 'தம்' அடிப்பது, மசாஜ் பார்லர் நடத்தும் தபுவுக்கும், விக்ரமுக்குமான நட்பு என மிக அழகாக உறவுமுறைகளின் புதிய பரிமாணம் தமிழுக்கு ரொம்ப புதுசு. 
காது கேளாத, வாய் பேச முடியாத பெண்ணாக வரும் இஷா ஷெர்வானி கண்களாலே பேசி மனதை கொள்ளை கொள்கிறார். ஜீவாவின் தந்தையாக நாசர்,'மன்னிப்பே அன்பின் வழி' என நிறைவாக நிறைவு செய்கிறார்.
 
 
கதையை தேடி சென்றால் ஏமாற்றமே மிஞ்சும். நதி போல் செல்லும் கதையில் எப்பொழுதும்போல் நாலு பாட்டு, பன்ச் வசனம் எதிர்பார்க்காமல் சென்றால், 'டேவிட்' ஒரு சிறந்த அனுபவம்.